நவம்பர் முதல் கண்களையும் ஸ்கேன் செய்தே கடவுச்சீட்டு! - sonakar.com

Post Top Ad

Tuesday 10 September 2019

நவம்பர் முதல் கண்களையும் ஸ்கேன் செய்தே கடவுச்சீட்டு!


கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும், "ஸ்கேனர்" இயந்திரங்கள் மூலம் கண்களை ஸ்கேன் செய்யும் புதிய முறைமையை அரசாங்கம்  அறிமுகப்படுத்தவுள்ளதாக, குடிவரவு மற்றும் குடியகழ்வுத்துறைக் கட்டுப்பாட்டாளர் நாயகம் பசன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த வருடம் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல், இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தடவுள்ளது. 

இந்தப் புதிய திட்டத்துக்கு, அமைச்சரவையினால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.குறித்த "பயோமெட்ரிக்" முறைமையை அறிமுகப்படுத்தத் தேவையான இயந்திரங்கள் உரிய நேரத்தில் பெறப்படும்.
குற்றம் சுமத்தப்பட்டு தடுப்புப் பட்டியலில் உள்ள நபர்களைக் கண்டறிந்து, அவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில், இந்த இயந்திரங்கள் விரைவில்  இறக்குமதி செய்யப்படவுள்ளன.

இதன்பிரகாரம்,  கடவுச்சீட்டுக்களில் சேர்க்கப்படும் இந்த விபரங்களை ஆராய, விசேட "ஸ்கேனர்" இயந்திரங்கள், கட்டுநாயக்க  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுவப்படவுள்ளன என்றும் கட்டுப்பாட்டாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

-ஐ. ஏ. காதிர் கான்

No comments:

Post a Comment