முன்னாள் லஞ்ச ஊழல் பணிப்பாளர் நாயகம் மற்றும் தற்போதைய சொலிசிஸ்டர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க சேவை ஆணைக்குழு தொலைபேசி ஊடாக சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர், அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
அவன்ட்கார்ட் விவகாரத்தில் தில்ருக்ஷியின் தொலைபேசி உரையாடல் பதிவொன்று வெளியாகி சர்ச்சையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment