மழை - வெள்ளம்: ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday 24 September 2019

மழை - வெள்ளம்: ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு


நாட்டில் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக 45,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தகவல் வெளியிட்டுள்ளது.கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல இடங்களில் வெள்ளம் தேங்கியிருப்பதால் பொது மக்கள் பாரிய அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர்.

மூவாயிரத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக மேலும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment