எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் தாம் வென்றால் ஆக்கிரமிப்பு நிலப்பகுதிகளை இஸ்ரேலின் நிலங்களாக பிரகடனப்படுத்தவுள்ளதாக சூளுரைத்துள்ளார் பென்ஜமின் நெதன்யாஹு.
சர்ச்சைக்குரிய இவ்வறிவித்தலுக்கு அரபு நாடுகள் மற்றும் ஐ.நா தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளன. எனினும், தனது முடிவில் திடமாக இருப்பதாக நெதன்யாஹு தெரிவிக்கிறார்.
மேற்கு கரை மற்றும் ஜோர்தானுடனான வட கடல் பகுதிகளையும் இவ்வாறு இஸ்ரேலின் பகுதிகளாக இணைத்துக்கொள்ளப் போவதாகவும் அதற்கு மக்கள் தமக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் நெதன்யாஹு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment