பணயக் கைதிகள் மீட்பு: முப்படையினர் விசேட பயிற்சி - sonakar.com

Post Top Ad

Thursday, 12 September 2019

பணயக் கைதிகள் மீட்பு: முப்படையினர் விசேட பயிற்சி


தீவிரவாதிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட பணயக் கைதிகளும் மீட்கும் விசேட பயிற்சியொன்றை முப்படையினரும் இணைந்து இன்றைய தினம் தம்புள்ள பகுதியில் மேற்கொண்டுள்ளனர்.


இப்பகந்துவ நீர்தேக்கம் அருகே தனித்திருக்கும் கட்டிடம் ஒன்றுக்குள் சிறைப்பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டதாகக் கருதப்பட்ட சுற்றுலாப் பயணிகளை மீட்கும் வகையில் இப்பயிற்சில் அமைந்துள்ளது.

முப்படையினரின் கூட்டு நடவடிக்கையாக இது இடம்பெற்றுள்ளதுடன் மீட்கப்பட்டவர்கள் வவுனியா வரை உலங்குவானூர்தியில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment