சஹ்ரானுடன் பயிற்சி பெற்ற சந்தேகத்தில் கைதான 64 பேருக்கு எதிர்வரும் 26ம் திகதி விளக்கமறியல் வழங்கியுள்ளது மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம்.
தடை செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் நுவரெலிய கூடத்தில் பயிற்சி பெற்றதாகக் கருதப்படும் காத்தான்குடி மற்றும் அண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த நபர்களுக்கே இவ்வாறு இன்று விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலையடுத்து இடம்பெற்ற தொடர் சோதனை நடவடிக்கைகள் மற்றும் உளவுத் தகவல்கள் அடிப்படையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment