யார் ஜனாதிபதி வேட்பாளராக வந்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி வெற்றி பெற முடியாது என தெரிவிக்கிறார் அக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
கட்சியின் ரத்தினபுரி மாவட்ட உறுப்பினர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள மைத்ரி, தமது கட்சிக்காக உழைத்தவர்களை ஒரு போதும் கைவிடப் போவதில்லையெனவும் தான் எடுக்கும் முடிவுகள் கட்சியின் நலன் காக்கும் வகையிலேயே அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்றைய அளவில் பெரமுனவில் இருப்போர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தொடர்வதே சுந்திரக் கட்சியின் தயவில்தான் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment