வரும் வாரத்துக்குள் 'சஜித்' தின் அறிவிப்பு: மனோ - sonakar.com

Post Top Ad

Sunday 15 September 2019

வரும் வாரத்துக்குள் 'சஜித்' தின் அறிவிப்பு: மனோ


ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பு சுமுகமாக முடிந்துள்ள நிலையில் எதிர்வரும் வாரத்திற்குள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் மனோ கணேசன்.இவ்விவகாரத்தை இதற்கு மேலும் இழுபறிக்குள்ளாக்காது விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையில் எதிர்வரும் வாரத்திற்குள் அறிவிப்பை வெளியிட இணக்கம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமை சஜித் பிரேமதாச வேட்பாளராவதற்கு இணக்கம் வெளியிட்டிருப்பதுடன் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தவும் அனுமதித்திருந்ததன் பின்னணியில் இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment