இலங்கையில் தூதரகத்தை திறப்பது குறித்து நைஜீரியா மீளாய்வு - sonakar.com

Post Top Ad

Wednesday 4 September 2019

இலங்கையில் தூதரகத்தை திறப்பது குறித்து நைஜீரியா மீளாய்வு


2018ம் ஆண்டு மூடப்பட்ட இலங்கைக்கான நைஜீரிய தூதரகத்தை மீண்டும் திறப்பது குறித்து மீளாய்வு செய்யப் போவதாக தெரிவித்துள்ளார் அந்நாட்டின் தலைவர் முஹமது புஹாரி.வெளியுறவு கொள்கைகள் மற்றும் செலவீனங்கள் நிமித்தம் சில தூதரகங்களை மூடுவதாக அக்கால கட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது தனது பதவிக்காலத்தை முடித்து நாடு திரும்பும் நைஜீரியாவுக்கான இலங்கைத் தூதரின் பிரியாவிடை நிகழ்வில் வைத்தே இவ்வாறு அந்நாட்டுத் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment