
வில்பத்து வனப்பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் அமைந்திருக்கும் பகுதி உட்பட்ட 8 ஏக்கர் நிலப்பரப்பை தேசிய வனப்பகுதியிலிருந்து பிரித்துத் தருமாறு அமைச்சர் ஜோன் அமரதுங்க அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை முன் வைத்துள்ளார்.
எனினும், சம்பிக்க ரணவக்க, காமினி ஜயவிக்ரம உட்பட்டோர் இதனை கடுமையாக எதிர்த்துள்ளதாக அறியமுடிகிறது.
தேவாலய உற்சவங்களை சுதந்திரமாக நடாத்தும் நிமித்தம் இது அவசியப்படுவதாக ஜோன் விளக்கமளித்துள்ள அதேவேளை, அதற்கான அனுமதியை வழங்கினாலும் காணியை தனியாக பிரித்துக் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment