முல்லைத்தீவில் நீராவியடி பிள்ளையார் கோயில் வளாகத்துக்குள் நீதிமன்ற தடையுத்தரவையும் மீறி இன்றைய தினம் ஞானசார மற்றும் கடும்போக்குவாத பிக்குகள் இறந்த தேரர் ஒருவரின் உடலைத் தகனம் செய்ததோடு கோயில் பூசாரியொருவரும் தாக்குதலுக்குட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எனினும், அண்மைக்காலகமாக சிங்கள கடும்போக்குவாத சக்திகளுடன் இணைந்து கிழக்கில் முஸ்லிம் விரோத இனவாத கருத்துக்களைப் பரப்பிவரும் வியாழேந்திரன் குழுவினர் இது தொடர்பில் மௌனம் காத்து வருகின்றனர்.
இன்றைய சம்பவத்தில் பொலிசார் முன்னிலையிலேயே நீதிமன்ற தடையுத்தரவு மீறப்பட்டதுடன் பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டிருப்பதுடன் கோயில் வளாகத்திலேயே இறந்த பிக்குவின் உடலம் எரிக்கப்பட்டாக வேண்டும் என கடும்போக்குவாதிகள் முனைப்பாகச் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment