
ஜனாதிபதி வேட்பாளர் சர்ச்சைக்குள் தான் மாட்டிக் கொள்ள விரும்பவில்லையென தெரிவித்துள்ளார் சபாநாயகர் கரு ஜயசூரிய.
இதற்கு முன்னரும் ஜனாதிபதி தேர்தலில் தன்னைப் போட்டியிடுமாறு பல தரப்பும் வலியுறுத்திய போதிலும் பொதுவாக அதிகாரப் போட்டிக்குள் தான் ஈடுபட விரும்புவதில்லையெனவும் இம்முறையும் சமய மற்றும் சமூக முக்கியஸ்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும் தான் அந்த வாய்ப்பைப் பெறுவதற்கு சர்ச்சைகளில் ஈடுபட விரும்பவில்லையென கரு மேலும் தெரிவித்துள்ளர்.
அனைத்து தரப்பும் ஒற்றுமையாகத் தன்னைத் தேர்வு செய்தால் போட்டியிடத் தயார் எனவும் கரு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment