ஜனாதிபதி தேர்தல்: சஜித் - நவின் பேச்சுவார்த்தை - sonakar.com

Post Top Ad

Sunday 22 September 2019

ஜனாதிபதி தேர்தல்: சஜித் - நவின் பேச்சுவார்த்தை


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளராகும் நம்பிக்கையில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சஜித் பிரேமதாச, இது தொடர்பில் நவின் திசாநாயக்கவுடன் பிரத்யேகமாக பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



எதிர்வரும் புதன் கிழமைக்குள் வேட்பாளர் அறிவிப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை கட்சிக்குள் சஜித் - கரு இடையே போட்டி  நிலை உருவாக்கப்பட்டுள்ளது. 

எனினும், தான் போட்டியிடுவது உறுதியென தெரிவித்து வரும் சஜித் பிரேமதாசவுக்கு கூட்டணி கட்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் ஆதரவு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment