முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஹும் அஸ்வர் இரண்டாவது வருடாந்த நினைவுப் பேருரை எதிர்வரும் 30மி திகதி கொழும்பு வை.எம்.எம்.ஏ மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மாலை 4 மணியளவில் ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில் பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் பன்முக சமூகத்தில் முஸ்லிம்களின் வகிபாகம் என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளதுடன் அமைச்சர் ரவுப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
இலங்கைக்கான பலஸ்தீன தூதர் உட்பட பல முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment