போரா மாநாடு: 50 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் எதிர்பார்ப்பு - sonakar.com

Post Top Ad

Monday 2 September 2019

போரா மாநாடு: 50 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் எதிர்பார்ப்புஇலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரா சமூகத்தின் சர்வதேச மாநாடு ஊடாக 50 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் எதிர்பாக்கப்படுகிறது.ஈஸ்டர் தாக்குதலையடுத்து வீழ்ச்சியடைந்திருந்த இலங்கை சுற்றுலாத்துறையை தூக்கி நிறுத்தும் முக்கிய வாய்ப்பாகக் கணிக்கப்பட்டு அரசாங்கத்தினால் பெரும் ஒத்துழைப்பு வழங்கப்பட்டு நடாத்தப்பட்டு வரும் குறித்த மாநாட்டுக்கு நாற்பது நாடுகளிலிருந்து 20,000க்கும் அதிகமான போரா சமூகத்தினர் பங்கேற்றுள்ளனர்.

விசேட விசா, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஒழுங்குகள் அரசினால் செய்து கொடுக்கப்பட்டுள்ள அதேவேளை நாட்டின் சுற்றுலாத்துறை பாதுகாப்பானது எனும் செய்தியை உலகுக்கு சொல்லக்கூடிய முக்கிய தருணமாக இந்நிகழ்வு கணிக்கப்படுகின்றது.

இதேவேளை, இராவணா பலய போன்ற பேரினவாத அமைப்புகள் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள எடுத்த முயற்சி  நீதிமன்ற தடையுத்தரவையடுத்து தற்சமயம் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment