ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய கூட்டணி கட்சித் தலைவர்கள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வீட்டில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடாத்தி வருவதாக அகில விராஜ் தகவல் வெளியிட்டுள்ளார்.
அகில, கபீர் ஹாஷிம், நவின், ரவி உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்களும் சம்பிக்க, மனோ உட்பட கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் இச்சந்திப்பில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானம் மாத்திரமே எஞ்சியிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைவது உறுதியெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராவதற்கான பிரயத்தனங்களில் சஜித் பிரேமதாச ஈடுபட்டு வரும் அதேவேளை கரு ஜயசூரிய தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment