மேற்கு ஆசிய பகுதிகளிலிருந்து தமது தளத்தை மாற்றியமைத்துக் கொண்டுள்ள ஐ.எஸ். அமைப்பு, இந்தியா - இலங்கை - துருக்கி மற்றும் ஆப்கனிஸ்தானில் கால் பதித்து இயங்கி வருவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது அமெரிக்காவிலிருந்து இயங்கும் Armed Conflict Location and Event Data (ACLED) என்ற அமைப்பு.
2018ல் ஈராக் - சிரிய பகுதிகளில் தமது கட்டுப்பாட்டில் இருந்த நிலங்களை இழந்த நிலையில் 2019ம் ஆண்டு உலகின் பல்வேறு இடங்களில் தாக்குதல்களை நடாத்தித் தமது தளத்தினை இவ்வமைப்பு விரிவு படுத்தியுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் பற்றி ஐ.எஸ். அமைப்புக்கு முன்னரே தெரியாது எனவும் அண்மையில் வெளிநாட்டு உளவு நிறுவனங்களை ஆதாரங்காட்டி தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment