அம்பாறை: சஹ்ரானிடம் பயிற்சி பெற்றதாக 16 வயது நபர் கைது! - sonakar.com

Post Top Ad

Friday 16 August 2019

அம்பாறை: சஹ்ரானிடம் பயிற்சி பெற்றதாக 16 வயது நபர் கைது!


ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானிடம் ஆயுத பயிற்சி பெற்றதாகக் கூறி அம்பாறை பொலிசாரினால்  16 வயது இளைஞன் இன்று கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.அபுஹசம் என அறியப்படும், குருநாகலில் வசித்து வந்த நௌபர் அப்துல்லா எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய தௌஹீத் ஜமாத்தின் இரண்டாம் நிலை தலைவர் என கருதப்படும் நௌபர் மௌலவி எனும் நபரின் புதல்வரே இவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ச்சியான சோதனை மற்றும் கைது நடவடிக்கைகள் ஊடாக சஹ்ரானுடன் தொடர்பிலிருந்து பலர் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment