மட்டக்களப்பில் ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைத் தாக்குதல் நடாத்திய நபரின் உடற்பாகம் இந்து மயானத்தில் புதைக்கப்பட்டதாகக் கூறி, அதனை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கோரி நேற்றைய தினம் அங்கு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.
இதன் போது ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிசார் மேற்கொண்ட கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் தடியடி நடாத்தியதாக தெரிவிக்கப்படும் நிலையில் நால்வர் காயமுற்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் போது இனவாத கோசங்கள் எழுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment