காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம்: பிராந்தியத்தில் பதற்றம்! - sonakar.com

Post Top Ad

Monday 5 August 2019

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம்: பிராந்தியத்தில் பதற்றம்!


அரை நூற்றாண்டுக்கு மேலாக காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது இந்திய மத்திய அரசு.இவ்வறிவிப்புடன் அப்பகுதிகளுக்கு மேலதி இராணுவத்தினர் அனுப்பப்பட்டுள்ளதுடன் இந்திய கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு-காஷ்மீர் பிரதேசத்தை இரு மாநிலங்களாகப் பிரிப்பதாகவும் இதனூடாக லடாகா தனித்தியங்கும் நிலப்பரப்பாக மாற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அந்தஸ்த்தின் ஊடாக காஷ்மீரின் பொது சேவை தொழில்வாய்ப்புகள் அம்மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கே வழங்கப்பட்டு வந்ததுடன் பிற மாநிலத்தவர்கள் அங்கு சென்று நிரந்தரமாகக் குடியேறவோ, காணிகளைக் கொள்வனவு செய்யவோ முடியாதவாறு சட்டம் அமைந்திருந்தது. எனினும் அதனூடாக காஷ்மீர் முன்னேறவில்லையென தெரிவிக்கின்ற மத்திய அரசு இன்று சிறப்பு அந்தஸ்த்தை நீக்கி அங்கு இராணுவத்தை குவித்துள்ளது. இப்பின்னணியில் பிராந்தியத்தில் பதற்றம் தோன்றியுள்ளமையும் காஷ்மீரின் இன்னொரு பகுதி பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment