வியாழேந்திரனுக்கு நீதிமன்றில் ஆஜராக உத்தரவு! - sonakar.com

Post Top Ad

Wednesday 28 August 2019

வியாழேந்திரனுக்கு நீதிமன்றில் ஆஜராக உத்தரவு!


மட்டக்களப்பில் தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத தூண்டுதல்களில் ஈடுபட்டு வரும் வியாழேந்திரன் மற்றும் ஐவருக்கு நேற்றைய ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளின் பின்னணியில் நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.


வியாழேந்திரனின் தூண்டுதலில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆகக்குறைந்தது நால்வர் காயமுற்றுள்ள அதேவேளை இனங்களுக்கிடையிலான பதற்றத்தை உருவாக்குவதில் குறித்த நபர் அண்மைக்காலமாக கடும்போக்குடன் நடந்து வருவது அவதானிக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்றைய நடவடிக்கையின் பின்னணியில் குறித்த நபருக்கு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment