
கோட்டாபே ராஜபக்ச இன்னும் அமெரிக்க பிரஜாவுரிமையைக் கை விடவில்லையென தெரிவிக்கின்றமை உண்மையென்றால் அவரை ஏன் இன்னும் பிடித்து சிறையிலடைக்க முடியவில்லையென கேள்வியெழுப்பியுள்ளார் மஹிந்தானந்த அளுத்கமகே.
கோட்டாபே அண்மையில் சிங்கப்பூர் சென்று திரும்பியதும் அண்மையில் பெற்றுக்கொண்ட இலங்கை கடவுச்சீட்டிலேயே என தெரிவிக்கின்ற மஹிந்தானந்த, கோட்டா தவறான தகவல்களை வழங்கி கடவுச்சீட்டைப் பெற்றிருந்தால் பிணையின்றி அவரை சிறையிலடைக்க முடியும் எனவும் தெரிவிக்கிறார்.
மஹிந்த ஆட்சிக்காலத்திலேயே கோட்டாபேவுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டிருந்த அதேவேளை தனக்கும் மனைவிக்கும் போலிக் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்ட விமல் வீரவன்சவுக்கும் பிணை வழங்கப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment