ஐக்கிய தேசியக் கட்சி வெல்வதற்கு வாய்ப்பே இல்லை: ஜோன்ஸ்டன் - sonakar.com

Post Top Ad

Tuesday 20 August 2019

ஐக்கிய தேசியக் கட்சி வெல்வதற்கு வாய்ப்பே இல்லை: ஜோன்ஸ்டன்ஐக்கிய தேசியக் கட்சி முழுமையாக வெடித்து சிதறிவிட்டது. அதில் எந்தவொரு வேட்பாளர் களமிறங்கினாலும் கட்சி உடைந்து போகும். அந்தக் குழுக்கள் இயங்க மாட்டாது. ரனில் வருவாராயின் சஜித் குழுவினர் வேலை செய்யமாட்டார்கள். நேரடியாக கோடாபாய ராஜபக்ஷவுக்கு அவர்கள் ஆதரவு வழங்குவார்கள். அதுதான் உணமை என்று குருநாகல் மாவட்ட  உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்தார்.

பொல்கஹவெலப் பிரதேசத்தில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் கட்சிக் கூட்டம் இடம்பெற்ற போது கலந்து கொண்ட குருநாகல் மாவட்ட  உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னான்டோ இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்: கருஜயசூரியவை வேட்பாளராக களமிறக்கினால் நாவின் திசாநாயகவினுடைய மாமா என்ற காரணத்தினால் சஜித் குழுவினர் வேலை செய்ய மாட்டார்கள். சஜித்  குழுவினர் எதிராக வாக்களிப்பார்கள். யாரைப் போட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடையும். மக்கள் விடுதலை முன்னணியினர் பற்றி என்ன கதை இருக்கிறது. எந்த வேட்பாளர்? என்ன பகடி ? இந்த நாட்டின் பொருளாதாரத்தை நாசம் பண்ணிய குழுவினரே உள்ளனர். சிலர் பெயர் சொல்வது அரசியலை நாசம் பண்ணியவர்கள் என்று கூறுகின்றனர்.

71 ஆம் ஆண்டில் ரோஹன விஜயவீர 12000 பேரை மைதானத்தில் தகனம் செய்தார். 87 களில் ரெக்டருக்கு தீ வைத்தார்கள், பஸ் வண்டிகளுக்கு தீ வைத்தார்கள். விவசாய மத்திய நிலையகள் எரியூட்டப்பட்டன. இலங்கையின் பொருளாதாரத்தை 25-35 வருடங்கள் பின்னோக்கிச் சென்றன. பிரபாகரன் ஒரு பக்கம் பொருளாதாரத்தை தேசப்படுத்தினார்.  அடுத்து நல்லாட்சி அரசாங்கம் வந்து சஹ்ரானை உருவாக்கி சஹ்ரானிடம் கூறி குண்டுத் தாக்குதலை மேற் கொண்டு முழு பொருளாதாரத்தையும் சேதப்படுத்தியுள்ளனர். இது தான் உண்மைக் கதையாகும். 

மக்கள் விடுதலை முன்னியினர் போடும் நாடகம் முழு நாட்டு மக்களுக்கும் தெரியும். அடுத்த அபேட்சகர்களுக்கு உதவி செய்வதற்காக பணம் அவர்களிடமிருந்து பணம் அறவிடுபவர்கள். அது தான் உண்மை. மக்கள் விடுதலை முன்னணியினர் எந்த வேட்பாளரை இறக்கினாலும் கோட்டபாய ராஜபக்ஷவை தோல்வியடைச் செய்ய முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

-இக்பால் அலி


No comments:

Post a Comment