வெள்ளவத்தையில் குழு மோதல்: மூன்று பொலிசாருக்குக் காயம் - sonakar.com

Post Top Ad

Monday 5 August 2019

வெள்ளவத்தையில் குழு மோதல்: மூன்று பொலிசாருக்குக் காயம்


வெள்ளவத்தையில் நேற்றிரவு இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் மூன்று பொலிசார் உட்பட ஆறு பேர் காயமுற்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


தனியார் நிறுவன ஊழியர்கள் குழுவொன்றுக்கும் குடியிருப்பாளர்களுக்குமிடையில் ஏற்பட்ட முறுகலே இவ்வாறு கைகலப்பில் முடிந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தைக் கட்டுப்படுத்த பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அனுப்பப்பட்டிருந்ததாக பொலிஸ் பேச்சாளர் விளக்கமளித்துள்ளார்.

No comments:

Post a Comment