பொஹட்டுவயின் தேவைக்கு மார்க்கத்தை மாற்ற முடியாது: அசாத் சாலி! - sonakar.com

Post Top Ad

Monday 5 August 2019

பொஹட்டுவயின் தேவைக்கு மார்க்கத்தை மாற்ற முடியாது: அசாத் சாலி!


அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் வழிகாட்டலை பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், பெரமுன ஆதரவாளர்கள் சிலர் தமது தேவைகளுக்காக பெரும்பான்மையின மக்கள் மத்தியில் இஸ்லாத்தைத் தவறாக விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ளவோ பெரமுனவின் தேவைக்காக மார்க்கத்தை மாற்றிக் கொள்ளவோ முடியாது என தெரிவித்துள்ளார் முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி.நேற்றைய தினம் தெஹிவளையில் முஸ்லிம்களின் உரிமைப் பாதுகாப்புக்கான மாநாடு இடம்பெற்ற நிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உட்பட சில பெரமுன ஆதரவாளர்கள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவையும் அதன் தலைமைத்துவத்தையும் கடுமையாக விமர்சித்தும் மார்க்கத்தைத் தமது சௌகரியத்துக்கேற்றபடி மாற்றிக்கொண்டும் கருத்து வெளியிட்டு வருவதாகவும் நேற்றைய மாநாடு மக்கள் அணி திரண்டுள்ளமையை எடுத்துக்காட்டுவதாகவும் தெரிவித்தார்.

இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்களாக நேற்றைய மாநாடு தப்லீக் மாநாடு என்றும் தவறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவ்வாறான பிரச்சாரங்களை மேற்கொள்வோர், இன்றைய நிலையில் பெரும்பாலும் பொஹட்டுவ ஆதரவாளர்களே எனவும் தெரிவித்த அசாத் சாலி, முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திருத்த விவகாரத்தில் ஜம்மியத்துல் உலமாவின் வழி காட்டல் உள்ள பக்கமே மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்ததுடன், எந்தக் கட்சியின் அவசரத்துக்காகவும் சட்டத்தை மாற்ற வேண்டிய அவசியமில்லையெனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment