மைத்ரிக்கு உதவி ஜனாதிபதி பதவியும் இல்லை: பெரமுன - sonakar.com

Post Top Ad

Friday 2 August 2019

மைத்ரிக்கு உதவி ஜனாதிபதி பதவியும் இல்லை: பெரமுன


மைத்ரிபால சிறிசேனவுக்கு உதவி ஜனாதபிதி பதவியையும் வழங்கத் தயாரில்லையென தெரிவிக்கிறது மஹிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன.கடந்த ஒக்டோபரில் ஏற்பட்ட மைத்ரி - மஹிந்த நட்பின் பின்னணி மர்மமாகவே இருந்த போதிலும் இருவரும் எதிர்கால உடன்படிக்கையொன்றின் பேரிலேயே கூட்டிணைந்ததாக நம்பப்பட்டது. எனினும், மைத்ரிபால சிறிசேன வேணடுமானால் சேர்ந்து கொள்ளலாம் ஆனாலும் எவ்வித பதவிகளும் தர முடியாது என பெரமுன தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பெரமுன தரப்பில் தனியான வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்படவுள்ளதோடு மைத்ரிபாலவுக்கு உதவி ஜனாதிபதி பதவியும் கொடுக்கத் தயாரில்லையென தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment