ஐக்கிய தேசியக்கட்சியினால் அத்துராலியே ரதன தேரர் மற்றும் விஜேதாச ராஜபக்ச ஆகியோர் ஒஐக்காற்று விசாரணைக்குட்படுபத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தன்னை விசாரிப்பதை விடுத்து கட்சியில் இருக்கும் பொது மக்கள் பணத்தை கொள்ளையடித்த நபர்களை முதலில் விசாரிக்க வேண்டும் என அவர் பதிலளித்துள்ளார்.
தனக்கு அவ்வாறு உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், தன்னை விசாரிக்க முன்பதாக ஆட்சியதிகாரத்துக்கு வந்ததும் கொள்ளையடித்து, பணம் சுருட்டிய பலர் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் என விசனம் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தமது கட்சியிலிருந்து கொண்டு பெரமுன நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக விசாரிக்கப் போவதாக நீண்ட நாட்களாக அறிக்கை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment