ஈஸ்டர் தாக்குதல் நியுசிலாந்துக்கான பழிவாங்கலே: ருவன் - sonakar.com

Post Top Ad

Thursday 1 August 2019

ஈஸ்டர் தாக்குதல் நியுசிலாந்துக்கான பழிவாங்கலே: ருவன்ஏப்ரல் 21ம் திகதி இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்கள், நியுசிலாந்து, க்றைஸ்ட்சேர்ச்சில் இடம்பெற்ற தாக்குதலுக்கான பழிவாங்கலே என தெரிவிக்கிறார் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன.ஷங்ரிலா குண்டுதாரி தனது மனைவியுடன் மேற்கொண்ட இறுதி தொலைபேசி உரையாடலைத் தான் செவி மடுத்ததாகவும் அதில் மிகத் தெளிவாக இத்தாக்குதல் பற்றி பேசுவதாகவும் அதில் நியுசிலாந்து தாக்குதலுக்கான பழிவாங்கலே இது என தெரிவிப்பதாகவும் விளக்கமளித்துள்ளார்.

எனினும், நியுசிலாந்து தாக்குதலுடன் எவ்வித தொடர்புமில்லையென முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment