
நாடளாவிய ரீதியில் கா.பொ.த உயர் தரப் பரீட்சை ஆரம்பமாகி நடை பெற்று வருவதை யாவரும் அறிவோம். இப்பரீட்சைக்கு முகம் கொடுக்கின்ற முஸ்லிம் மாணவிகள் தமது பர்தாக்களுடன் பரீட்சை எழுத அரசாங்கத்தின் அனுமதி இருந்த போதிலும் நாட்டின் சில பாகங்களில் அதிகாரிகள் இதற்கு இடையூறாக இருந்து மாணவிகளை மன உளைச்சளுக்கு உட்படுத்தியதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது.
இது போன்ற சம்பவங்கள் முன்னைய காலங்களிலும் இடம் பெற்றிருந்த போதும் அதற்கான அனுமதியை பரீட்சைத் திணைக்களம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பரீட்சை நிலைய அதிகாரிகளின் இவ்வாறான செயற்பாடுகளால் மாணவிகள் மன உளைச்சளுக்கு உட்பட்டு பரீட்சைக்கு ஒழுங்காக முகம் கொடுக்க முடியாத நிலை உருவாகின்றது.
எனவே இவ்விடயத்தில் நாட்டின் ஜனாதிபதி மற்றும் உரிய அதிகரிகள் பொதுவாகவும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாகவும் கூடிய கவனம் செலுத்தி அவசரமாக நிரந்தர தீர்வொன்றை மாணவிகளுக்கு பெற்றுக் கொடுக்க முன் வர வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
No comments:
Post a Comment