தொடர் நஷ்டத்தில் இயங்கி வருவதாகக் கூறிக்கொண்டு விமான சேவைக்கான கட்டணங்களையும் உயர்த்தியுள்ள ஸ்ரீலங்கன், கடந்த ஏப்ரல் இறுதி வரையான காலப்பகுதியில் 230 பில்லியின் ரூபா மொத்த இழப்பில் இயங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் அரச வங்கிகளுக்கு மாத்திரம் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் 102 பில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை நிறுவனம் தொர்ந்தும் பாரிய நஷ்டத்தில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு நிறுவனங்கள் பொறுப்பேற்க மறுத்துள்ள நிலையில் புதிய நிர்வாகம் அண்மையில் மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment