இலங்கையில் 11ம் திகதி அரபா தினம்; 12ம் திகதி பெருநாள்! - sonakar.com

Post Top Ad

Friday 2 August 2019

இலங்கையில் 11ம் திகதி அரபா தினம்; 12ம் திகதி பெருநாள்!


துல்ஹிஜ்ஜாஹ் மாதத்திற்கான தலைப் பிறை பார்க்கும் மாநாடு இன்று மாலை மஹ்ரிபு தொழுகைக்குப் பிறகு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம் பெற்றது. இதன்போது நாட்டின் பல பாகங்களிலும் துல்ஹிஜ்ஜாஹ் மாத்திற்கான தலைப் பிறை தென்பட்டதால் புனித ஹஜ்ஜூப் பெருநாளை இலங்கை வாழ் முஸ்லிம்கள் எதிர்வரும் 12ஆம் திகதி திங்கற்கிழமை கொண்டாடலாம் என பிறைக் குழு ஏகமனதாக தீர்மானித்து நாட்டு மக்களுக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

இதேவேளை புனித அறபா தினத்தை எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 11ஆம் திகதி அனுஷ்டிக்குமாறும் பிறைக்குழு அறிவித்துள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் ஏற்பாடு செய்த இம்மாநாட்டில் அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபை பிரதிநிதிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள், மேமன் சங்க பிரதிநிதிகள், ஏனைய பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-ஏ.எஸ்.எம்.ஜாவித்

No comments:

Post a Comment