குருநாகல் மஜிஸ்திரேட்டுக்கு எதிராக Dr இமாரா ஷாபி முறைப்பாடு - sonakar.com

Post Top Ad

Thursday 18 July 2019

குருநாகல் மஜிஸ்திரேட்டுக்கு எதிராக Dr இமாரா ஷாபி முறைப்பாடு


பக்கசார்பாக நடந்து கொள்வதாக குருநாகல் மஜிஸ்திரேட் சம்பத் ஹேவாவசத்துக்கு எதிராக முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார் மருத்துவர் ஷாபியின் மனைவி இமாரா ஷாபி.


நீதி சேவைகள் ஆணைக்குழுவில் இம்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை இளம் ஊடகவியலாளர்கள் சங்கமும் இதே போன்று பிறிதொரு முறைப்பாட்டை பதிவு செய்துள்ளது.

குருநாகல பொலிசார் மருத்துவர் ஷாபிக்கு எதிரான முறைப்பாடுகளை திரிபுடுத்தியிருப்பதோடு குருநாகல் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வீரபண்டாரவின் வாக்குமூலத்தை முற்றாக நீக்குவதற்கும் மீள சமர்ப்பிப்பதற்கும் வாய்ப்பளிக்க முனைவதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளதுடன் இவ்விடயத்தில் மஜிஸ்திரேட் பக்கசார்பாக நடந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மருத்துவர் இமாரா ஷாபி அண்மையில் சோனகர்.கொம் நேரலையில் கலந்து கொண்ட போது தெரிவித்த கருத்துக்களை கீழ்க்காணும் பதிவில் செவிமடுக்கலாம்.


No comments:

Post a Comment