தொடரும் மண் சரிவு அபாயம்: கடைகள் சேதம்; உயிரிழப்பு - sonakar.com

Post Top Ad

Friday 19 July 2019

தொடரும் மண் சரிவு அபாயம்: கடைகள் சேதம்; உயிரிழப்புமலைநாட்டுப் பகுதியில் நிலவும் மோசமான கால நிலை மற்றும் மண் சரிவால் கினிகத்தேனயில் 10 கடைகள் சேதமுற்றுள்ளதுடன் 64 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதேவேளை, நேற்றைய தினம் அகரபதாதனயில் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த இரண்டாவது மாணவியின் சடலமும் கிடைக்கப் பெற்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படையினர் மற்றும் இராணுவத்தினர், பொது மக்கள் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்ற அதேவேளை களு மற்றும் களனி கங்கை நீர் மட்டம் உயர்ந்து வருவதாகவும் சூழவுள்ள மக்கள் அவதானமாக இருக்கும்படியும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment