சஹ்ரான் குழுவுக்கு நிதியுதவி செய்த நபர் சிங்கப்பூரில் கைது - sonakar.com

Post Top Ad

Saturday 27 July 2019

சஹ்ரான் குழுவுக்கு நிதியுதவி செய்த நபர் சிங்கப்பூரில் கைது


சஹ்ரானின் அமைப்புக்கு நிதியுதவி செய்து வந்த குற்றச்சாட்டில் மே மாதமளவில் சிங்கப்பூரில் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.குதுப்தீன் ஹாஜா நஜிமுதீன் என அறியப்படும்  வயது நபரே இவ்வாறு அங்கு கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை குறித்த நபருக்கும் தாக்குதலுக்கும் தொடர்புகளிருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் காணப்படவில்லையெனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதேவேளை அங்கிருந்தும் ஐ.எஸ். அமைப்பினரோடு இணைய முயற்சி செய்த குற்றச்சாட்டில் மேலும் ஒரு 47 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment