குடிபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் நிமித்தம் கடந்த 22 நாட்களில் 142 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் சுமார் 5705 பேர் இவ்வாறு குடி போதையில் வாகனம் செலுத்தி பொலிசாரிடம் சிக்கிசக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரு தடவைகள் இவ்வாறு சிக்கிக் கொள்பவர்களின் வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை வாழ்நாள் தடைக்குள்ளாக்குவது குறித்தும் பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment