மத்ரசாக்களை பதிய அவசரப்பட வேண்டாம்: ஞானசார எச்சரிக்கை - sonakar.com

Post Top Ad

Tuesday 23 July 2019

மத்ரசாக்களை பதிய அவசரப்பட வேண்டாம்: ஞானசார எச்சரிக்கைஇலங்கையில் உள்ள மத்ரசாக்களை அவசர அவசரமாக பதிந்து, அரச அங்கீகாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவ்வாறு அவசரப்படுவது ஆபத்தானது எனவும் தெரிவிக்கிறார் ஞானசார.சில மத்ரசாக்களில் அடிப்படைவாதமே கற்பிக்கப்படுவதாகவும் அவ்வாறான மத்ரசாக்களுக்கு அங்கீகாரம் வழங்குவது ஆபத்தானது எனவும் அவர் தெரிவிப்பதோடு சலபி, ஜமாத்தே இஸ்லாமி கொள்கைகள் புகட்டப்படும் இடங்கள் ஆபத்தானவை எனவும் தெரிவிக்கிறார்.

2012ம் ஆண்டு முதல் இலங்கையில் நிலவி வரும் அடிப்படைவாதம் குறித்துத் தாம் குரல் எழுப்பி வருகின்ற அதேவேளை 2013ம் ஆண்டு கூட சில முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு மத்ரசாக்களை சட்டரீதியாக உருவாக்க நாடாளுமன்றிலும் பிரேரணை சமர்ப்பித்திருப்பதாகவும் தெரிவிக்கும் அவர், ஜம்மியத்துல் உலமாவுக்கு சமூகத்துக்குள் நிலவும் அடிப்படைவாதம் பற்றி நன்கு தெரியும் எனவும் தற்சமயம் புதிய சட்டங்களை கொண்டுவர அவசரப்படத் தேவையில்லையெனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment