சிங்ஹல ராவயவுக்குள் 'குழப்பம்': நிர்வாகம் கலைப்பு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 23 July 2019

சிங்ஹல ராவயவுக்குள் 'குழப்பம்': நிர்வாகம் கலைப்பு!


சிங்ஹல ராவய கடும்போக்குவாத அமைப்பின் சார்பில் களுத்துறையிலிருந்து ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படவுள்ளதாக அவ்வமைப்பின் முக்கியஸ்தர் தெரிவித்த கருத்தினையடுத்து குறித்த துறவிகள் அமைப்புக்குள் குழப்பம் ஏற்பட்டு நிர்வாகம் கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி மைத்ரி மற்றும் மஹிந்தவுடன் நெருக்கமான அக்மீமன தயாரத்ன தேரரே தமது அமைப்பின் நிர்வாகம் கலைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளதுடன் நிறைவேற்று அதிகாரமுள்ள தலைவர் என்ற அடிப்படையில் தனக்கு மாத்திரே தற்போது அதிகாரமுள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தலில் யாரும் களமிறக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

2017ம் ஆண்டு ஞானசாரவை பொலிசார் விசேட படையினரைக் களமிறக்கித் தேடிக்கொண்டிருந்ததாக தெரிவித்திருந்த நிலையில் அவரை நீதிமன்றுக்கு அழைத்து வந்து உடனடியாகப் பிணை பெற்று அழைத்துச் சென்றதில் அக்மீமன தயாரத்ன தேரருக்கு முக்கிய பங்கிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment