ஜனாதிபதி தேர்தலை முதலில் நடாத்துவதே சிறந்தது: கரு - sonakar.com

Post Top Ad

Sunday 21 July 2019

ஜனாதிபதி தேர்தலை முதலில் நடாத்துவதே சிறந்தது: கரு


அவசர அவசரமாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடாத்த முயல்வதை விட ஜனாதிபதி தேர்தலை அதற்குரிய காலத்தில் முறையாக நடாத்துவதே சிறந்தது என அபிப்பிராயம் தெரிவித்துள்ளார் சபாநாயகர் கரு ஜயசூரிய.கரு ஜயசூரிய - ரணில் விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தேர்தல் ஆணைக்குழு தலைவரை கடந்த வாரம் சந்தித்த போதும் ஜனாதிபதி தேர்தலை முதலில் நடாத்துவதே சிறந்ததென கருத்துப் பகிரப்பட்டதாகவும் அறியமுடிகிறது. 

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கரு ஜயசூரிய முன்நிறுத்தப்பட வேண்டும் என கட்சிக்குள் கருத்து நிலவி வரும் நிலையில் சஜித் பிரேமதாச தனது பிரச்சார நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment