யாழில் கொல்லப்பட்டது 'ஆவா' குழு உறுப்பினர்: பொலிஸ் - sonakar.com

Post Top Ad

Sunday, 21 July 2019

யாழில் கொல்லப்பட்டது 'ஆவா' குழு உறுப்பினர்: பொலிஸ்


நேற்றிரவு யாழ், மானிப்பாய் பகுதியில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் ஆவா குழு உறுப்பினர் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இனுவில் பகுதியில் தமது குழுவிலிருந்து பிரிந்து சென்ற சிலரது வீடுகளைத் தாக்க ஆறு பேர் கொண்ட ஆவா குழு மோட்டார் சைக்கிளில் ஆயுதங்களுடன் வருவதாக கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து வீதி சோதனைகள் இடம்பெற்றதாகவும் இதன் போது பொலிசாரைத் தாக்க முயன்ற நபர் மீதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறி பார்த்துச் சுடுவதில் தேர்ச்சி பெற்ற பொலிஸ் அதிகாரியொருவர் அங்கு கடமையில் இருந்ததாகவும் அவரே இத்துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாகவும் பொலிசார் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment