ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக திறமையும், மக்கள் ஆதரவும் உள்ள சஜித் பிரேமதாசவே முன் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்து வரும் மங்கள சமரவீர, ரணில் மற்றும் கரு ஜயசூரிய உட்பட கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் இதனை ஏற்று அணி திரள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்தே வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அதனை வெற்றிகரமாக செய்து முடிக்க அனைவரும் ஒன்று திரள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்காக, ரணில் விக்கிரமசிங்கவின் வகிபாகத்தினை குறைத்து மதிப்பிடுவதாக அர்த்தம் இல்லையெனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment