நீங்களே 'தேடி'க் கண்டு பிடியுங்கள்: தயாசிறி! - sonakar.com

Post Top Ad

Wednesday 10 July 2019

நீங்களே 'தேடி'க் கண்டு பிடியுங்கள்: தயாசிறி!

dF6B8c7

தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டு வெடிக்கப்படாததன் மர்மம் என்னவென்பதை தெரிவுக்குழு தேடிக்கண்டு பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் தயாசிறி ஜயசேகர.


குறிப்பாக, இவ்விடயத்தினைப் பற்றி விசாரிக்கவே தயாசிறி இன்று அழைக்கப்பட்டிருந்த போதிலும், தெரிவுக்குழுவினர் குறித்த ஹோட்டலில் அன்றைய தினம் தங்கியிருந்தோர் பற்றிய விபரங்களை ஆராய்ந்து பார்த்து, அங்கு ஏன் குண்டு வெடிக்கவில்லையென்று மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என தயாசிறி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் விசாரணைக்கு சமூகமளிக்காது போனால் நடவடிக்கையெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தயாசிறி விசாரணைக்கு சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment