ஹலீம் கெஞ்சல்: தொடரும் தபால் ஊழியர் வேலை நிறுத்தம் - sonakar.com

Post Top Ad

Wednesday 17 July 2019

ஹலீம் கெஞ்சல்: தொடரும் தபால் ஊழியர் வேலை நிறுத்தம்மூன்று முக்கியகோரிக்கைகளை முன் வைத்து, கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊழியர்கள் நேற்றைய தினம் ஆரம்பித்த பணிப் பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கிறது.இந்நிலையில், ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்குத் திரும்புமாறு மீண்டும் அவ்வமைச்சுப் பொறுப்பினைப் பெற்றுக்கொண்ட ஹலீம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆயினும், கடந்தவருடம் ஜூன் மாதம் 11ஆம் திகதிமுதல் 27ஆம் திகதிவரை 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பை அடுத்து அரசினால் கடந்த செப்டெம்பர் மாதம் அமைச்சரவையில் முன் வைக்கப்பட்டிருந்த பரிந்துரைகள் இதுவரை நிறைவேற்றப்படாத நிலையிலேயே இவ்வடையாள உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருப்பதாகவும் அரசு செவி சாய்க்காவிடின் நாடளாவிய ரீதியில் போராட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-ஏ.எஸ்.எம்.ஜாவித்

No comments:

Post a Comment