நீண்ட காலம் தாக்குப் பிடிக்கவும், தகவல் பரிமாற்றத்தை துல்லியமாகவும் செய்யக்கூடிய வகையில் சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் சிபார்க் அப்துல் கபூர் தயாரித்து உருவாக்கியுள்ள Coaxial கேபிள் வகைக்கான காப்புரிமை (Patent) விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இலத்திரனியல் துறையில் ஆர்வம் வெளிக்காட்டி வரும் 16 வயது மாணவனான சிபார்க் இது பற்றி சோனகர்.கொம்மிடம் தெரிவிக்கையில் இதுவே தனது கன்னி முயற்சியெனவும் தனது விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு அதற்கான பதிலும் வழங்கப்பட்டுள்ள நிலையில், இவ்வகைத் தயாரிப்பில் வேறு போட்டியில்லையென்பதால் விரைவில் அங்கீகாரத்துக்கான சான்றிதழை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
சம்மாந்துறை-02ல் வதியும் சிபார்க்கை நேரடியாக வாழ்த்தி உரையாடியிருந்த எமது பிரதமர் ஆசிரியர் இர்பான் இக்பால் இதுபற்றி விளக்கமாகக் கேட்டறிந்த போது, தனது கேபிள் தயாரிப்பு துருப்பிடிக்காத வகையில் எத்தகைய கால நிலைக்கும் ஏற்றவாறு உருவாக்கப்பட்டிருக்கிறது எனவும் எதிர்காலத்தில் நல்ல நிறுவனம் ஒன்றுடன் இணைந்து வர்த்தக ரீதியாக தயாரிப்பதற்கு ஆர்வம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
சந்தைப்படுத்தலில் ஆர்வமுள்ளவர்கள் - வாழ்த்த விரும்புகிறவர்கள், இவ்விளம் கண்டுபிடிப்பாளரை 0778393338 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாகத் தொடர்பு கொள்ள முடியும்.
No comments:
Post a Comment