
பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபே அறிவிக்கப்படப் போவதில்லையெனவும் மஹிந்த ராஜபக்ச அதற்குத் தயங்கி வருவதாகவும் தெரிவிக்கிறார் அமைச்சர் பி. ஹரிசன்.
ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலன்றி தனது அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிடப் போவதில்லையென முன்னர் கோட்டாபே தெரிவித்திருந்த நிலையில் அவரது தீவிர ஆதரவாளர்களான விமல் வீரவன்ச மற்றும் கம்மன்பில தொடர்ச்சியாக மிகைப்படுத்திய தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையிலேயே, இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஹரிசன், மஹிந்த ராஜபக்ச ஒரு போதும் கோட்டாபேவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்போவதில்லையென தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment