கோட்டாபே வடிகட்டிய 'இனவாதி': நிலைப்பாட்டில் மாற்றமில்லை: SB - sonakar.com

Post Top Ad

Sunday, 16 June 2019

demo-image

கோட்டாபே வடிகட்டிய 'இனவாதி': நிலைப்பாட்டில் மாற்றமில்லை: SB

QSfCP7p

கோட்டாபே ராஜபக்ச வடிகட்டிய இனவாதி எனும் தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லையென தெரிவிக்கின்ற எஸ்.பி திசாநாயக்க, பொது பல சேனாவை உருவாக்கி, வளர்த்தெடுத்தது அவர் தான் என்பதில் தமக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லையென்கிறார்.



இந்நிலையில், கோட்டாபேவுக்கு யுத்த நிறைவு மற்றும் பௌத்த அடிப்படைவாத சக்திகளின் ஆதரவு இருக்கிறதே தவிர அவருக்கு சிறுபான்மை மக்களின் ஆதரவு கிடைக்கப்போவதில்லையெனவும் எஸ்.பி தெரிவிக்கிறார்.

ஜுலை 7ம் திகதி பொது பல சேனா அமைப்பினர் எதிர்கால இலங்கையை வழி நடாத்தப் போகும் மாநாடொன்றை நடாத்தப் போவதாகவும் அதற்கு 10,000 பௌத்த துறவிகளை ஒன்று கூட்டப் போவதாகவும் அங்கு வைத்து பிரகடனம் ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment