கா'குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்துக்கு PSC அழைப்பு - sonakar.com

Post Top Ad

Monday 10 June 2019

கா'குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்துக்கு PSC அழைப்பு


கடந்த 21/04/2019 உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்பாக  காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் நாளை(11/06/2019) சாட்சியமளிக்கவுள்ளது.


மேற்படி பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னாள் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் சாட்சியமாளிக்கும் ஏற்பாடுகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் றவூப் ஹக்கீம் அவர்கள் மேற்கொண்டிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் காத்தான்குடி நிலமைகள் மற்றும் தேசிய தௌஹீத் ஜமாஅத் மற்றும் அதன் ஸ்தாபகர் தற்கொலை சூத்திரதாரி ஸஹ்ரான் தொடர்பிலும் தாக்குதலின் பின்னர் காத்தான்குடி எதிர்நோக்கிய பல்வேறு பாதுகாப்பு மற்றும் ஏனைய கெடுபிடிகள் மற்றும் கைதுகள் தொடர்பில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களின் கவனத்துக்கு அவரின் இணைப்புச் செயலாளரும்,அமைப்பாளருமான யு.எல்.எம்.என்.முபீன் கொண்டுவந்திருந்தார்.

மேலும் ஸஹ்ரான் மற்றும் தேசிய தௌஹீத் ஜமாஅத் தொடர்பில் இந்த தற்கொலை தாக்குதல்களுக்கு முன்பாக சம்மேளனம்,உலமா சபை மற்றும் ஏனைய அமைப்புக்கள் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.மேற்படி விடயங்கள் தொடர்பில் நேரடியாக பல தடவைகள் கொழும்பில் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களை சந்தித்து தெளிவு படுத்தியுமிருந்தார்.அதனைத்தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற தெரிவுக்குழு அமர்வின் போது அதன் உறுப்பினர் றவூப் ஹக்கீம் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தை அழைத்து சாட்சியம் பெற வேண்டுமென தெரிவுக்குழுவுக்கு தெரியப்படுத்தினார்.

அத்துடன் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன சிரேஷ்ட உறுப்பினரும்,சம்மேளன சமாதான நல்லிணக்க பேரவையின் தலைவருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்களை தொலைபேசியில் அழைத்து பொருத்தமான மூன்று சம்மேளன பிரதிநிதிகளை தெரிவு செய்து அவர்களின் விபரங்களை அனுப்பிவைக்குமாறு தேசியத்தலைவர் றவூப் ஹக்கீம் வேண்டிக்கொண்டார்.

அதற்கமைவாக நாளைய சாட்சியமாளிக்கும் நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் அல்ஹாபிழ்.றமீஸ்(ஜமாலி), சம்மேளன முன்னாள் தலைவர்   ஓய்வுபெற்ற சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் சுபைர்,சிரேஷ்ட சட்டத்தரணி உவைஸ் ஆகியோர் சாட்சியமாளிக்கவுள்ளனர்.

மேலும் நாளைய தெரிவுக்குழு முன்பாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் பிரதிநிதிகள்,மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் ஸாலி மற்றும் மௌலவி.கலீல் ஆகியோரும் சாட்சியமளிக்கவுள்ளனர்.

-ஆதிப் அஹமட்

No comments:

Post a Comment