
கம்பஹா மாவட்ட விகாரைகளுக்கு அமைச்சர் மங்கள சமரவீர செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது தொடர்பில் இன்று மாத்தறையில் நிகழ்வொன்றில் வைத்து கேள்வியெழுப்பியுள்ள நிதியமைச்சர், இனவாதத்தை எதிர்த்துப் பேசுவது தவறா? என வினவியுள்ளார்.
இன - மத பேதமற்ற முறையில் நாட்டின் அனைத்து மதங்களையும் மதித்து வரும் தாம் இவ்வருடம் மாத்திரம் விகாரைகளின் அபிவிருத்திக்கு 2090 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளதாகவும் இது நாட்டில் இயங்கும் 4124 விகாரைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை பௌத்தர்களுக்கு மட்டும் உரிய நாடில்லையென கருத்துரைத்த நிலையில் மங்கள சமரவீரவுக்கு எதிராக பௌத்த மகா சங்கத்தினர் இவ்வாறு தடை விதித்துள்ள அதேவேளை இன்றைய அவரது நிகழ்வில் கட்சி ஆதரவு துறவிகள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment