திருத்தப்பட்ட சுற்று நிருபம் வெளியீடு; முடிவுக்கு வந்தது சர்ச்சை! - sonakar.com

Post Top Ad

Thursday 27 June 2019

திருத்தப்பட்ட சுற்று நிருபம் வெளியீடு; முடிவுக்கு வந்தது சர்ச்சை!


பொது சேவையில் உள்ள முஸ்லிம் பெண்கள் அபாயா, ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்த சுற்று நிரூபம், அரசியல் தலைமைகளின தீவிர முயற்சிக்குப் பின்னர் திருத்தி வெளியிடப்பட்டுள்ளது.


பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய சுற்று நிருபத்தை மாற்றுவதக்கு பெரும் எதிர்ப்பை வெளியிட்டு வந்த அமைச்சின் செயலாளர் ஊடாகவே இத்திருத்தம் வெளியிடப்பட்டுள்ளதுடன் சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கப்பட்டு, கண்ணியமான முறையில் முகம் மூடாத வகையில் திரை ஆடைகளை அணியலாம் என சேர்க்கப்பட்டுள்ளது.

சர்ச்சை சுற்று நிருபத்தை பிரதமர் அலுவலகம் உடனடியாக நிராகரித்திருந்ததுடன் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இது விடயத்தில் சிரத்தையுடன் பணியாற்றியிருந்தமையும் புத்தளம் உட்பட வட மேல் மாகாணத்தின் ஐந்து பிரதேச சபைகளில் பணியாற்றும் முஸ்லிம் பெண்கள் ஊடாக 157 முறைப்பாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

Abdul said...

அரசாங்க நிர்வாகத்தில் வேலைபார்க்கும் முஸ்லீம் பிரதிநிதி ஒருவருக்கு ஏன் இந்த திருத்தவேளை முன்னின்று செய்ய முடியாது?அல்லது அந்த அச்சகத்தில் முஸ்லிமல்லாத தமிழர் ஒருவரா இப்படி அர்த்தமற்ற சொட்களை பாவித்து எழுதுகிறார்கள் ஆக அதையும் மிஞ்சி முஸ்லீம் கலாசார அமைச்சின் பிரதிநிதிகள் ஏன் இவ்வாறான தவறுகளை உடன் திருத்திக்கொள்ளுவதில்லை.

Post a Comment