கோட்டாபேக்கு எதிராக அமெரிக்காவில் மேலும் வழக்குகள் - sonakar.com

Post Top Ad

Thursday, 27 June 2019

கோட்டாபேக்கு எதிராக அமெரிக்காவில் மேலும் வழக்குகள்


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபே ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவில் மேலும் பல வழக்குகள் பதிவாகியுள்ளன.2008 முதல் 2013 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற துன்புறுத்தல்களின் பின்னணியில் இவ்வழக்குகள் தொடரப்பட்டுள்ளதோடு இம்முறை இரு சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இணைந்துள்ள நிலையில் மொத்தம் 10 வழக்குகள் தற்போது பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி வேட்பாளராகும் நிலையில் அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட உள்ளதாக தெரிவிக்கும் கோட்டாபே அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டதாகவும் தெரிவிக்கிறார். இந்நிலையிலேயே இவ்வாறு வழக்குகள் பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment