நாட்டின் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியிலும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வருடாந்த இப்தார் இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
குறித்த நிகழ்வில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவர் ரிஸ்வி முப்தி, பைசர் முஸ்தபா, காதர் மஸ்தான் உட்பட பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்த அதேவேளை நிகழ்வு சோபையிழந்து காணப்பட்டதாக கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று காலை வரை யாரும் இராஜினாமா செய்யத் தேவையில்லையென தெரிவித்து வந்த ஜனாதிபதி, திடீரென மாலை வேளையில் தனக்கு அழுத்தம் கூடிவிட்டதாக தெரிவித்து இராஜினாமா கடிதங்களைப் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment